Sri Lanka vs South Africa Dream11 Prediction Match 4, ICC T20 World Cup 2024: ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறவுள்ள நான்காவது லீக் போட்டியில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு சீசனில் நடைபெறும் முதல் மிக பெரிய போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியுள்ள இரு அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. 

SL vs SA Match Details

  • மோதும் அணிகள் - இலங்கை vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம், நியூயார்க்
  • நேரம் - இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

SL vs SA : Pitch Report

Advertisement

நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை எந்த ஒரு சர்வதேச போட்டிகளையும் நடத்தவில்லை, இதனால் ஆடுகளத்தின் சரியான நடத்தையை கணிப்பது கடினமாக உள்ளது. இருப்பினும், சமீபத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தை பார்க்கையுல் நிச்சயம் தொடக்கத்தில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கத்தை செலுத்த முடியும். அதுமட்டுமின்றி இங்குள்ள பவுண்டரி எல்லைகளும் பெரியது என்பதால நிச்சயம் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க தடுமாறுவார். அதேசமயம் அதிரடியாக விளையாட முயற்சிக்கு வீரர்களால் ரன்களை சேர்க்க முடியும் என்பதால் நிச்சயம் பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

SL vs SA : Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 17
  • தென் ஆப்பிரிக்கா - 11
  • இலங்கை - 05
  • முடிவில்லை - 01

SL vs SA : Live Streaming Details

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Sri Lanka vs South Africa​​​​​​​ Predicted Teams

இலங்கை: பதும் நிஷங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, சதீர சமரவிக்ரம, தசுன் ஷனகா, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க (கே), துஷ்மந்தா சமீரா, மஹீஷ் தீக்ஷன, மதீஷா பதிரானா, தில்ஷன் மதுஷங்கா.

தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், ரீசா ஹென்றிக்ஸ், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி.

SL vs SA Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: குயின்டன் டி கா, குசால் மெண்டிஸ், ஹென்ரிச் கிளாசென்
  • பேட்டர்ஸ்: ரீஸா ஹென்றிக்ஸ், சரித் அசலங்கா
  • ஆல்-ரவுண்டர்கள்: தனஞ்செயா டி சில்வா, ஐடன் மார்க்ரம், வநிந்து ஹசரங்கா
  • பந்துவீச்சாளர்கள்: காகிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்ஸி, மஹீஷ் தீக்‌ஷனா

Sri Lanka vs South Africa Fantasy Tips, SL vs SA: Dream11 Team, Sri Lanka vs South Africa: Predicted XIs, SL vs SA: Pitch Report, SL vs SA: Live Streaming Details, SL vs SA: Head-to-Head, SL vs SA: Dream11 Prediction match 4 ICC T20 World Cup 2024

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News