Sri Lanka vs West Indies 3rd T20I Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றிபெற்று 1-1  என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.

Advertisement

இந்நிலையில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் ஏற்கெனவே தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளது. 

SL vs WI 3rd T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானம், தம்புளா
  • நேரம் - அக்.17 இரவு 7 மணி (இந்திய நேரப்படி)

SL vs WI 2nd T20I: Pitch Report

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு 23 டி20 போட்டிகள் நடந்துள்ளன, அதில் 10 முறை முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் 13 போட்டிகளில் சேசிங் செய்தஅணி வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 141 ரன்களாவும், மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராக 209 ரன்களும் உள்ளன. மேலும் இந்த மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்பதால் நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

SL vs WI 2nd T20I: : Where to Watch?

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ரசிகர்கள் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.  

SL vs WI 2nd T20I: Head To Head Record

  • மொத்தம் - 17
  • இலங்கை - 00
  • வெஸ்ட் இண்டீஸ் - 08
  • முடிவில்லை - 00

Sri Lanka vs West Indies 2nd T20I: Probable Playing XI

இலங்கை உத்தேச லெவன்: பாதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா(கே), பானுக ராஜபக்ச, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷனா, மதீஷா பதிரனா, நுவன் துஷார

வெஸ்ட் இண்டீஸ் உத்தேச லெவன்: பிராண்டன் கிங், எவின் லூயிஸ், ஆண்ட்ரே ஃபிளெட்சர், ரோஸ்டன் சேஸ், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரோவ்மேன் பவல்(கே), ரொமாரியோ ஷெப்பர்ட், ஷமர் ஸ்பிரிங்கர், அல்ஸாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, ஷமர் ஜோசப்.

Sri Lanka vs West Indies 2nd T20I Dream11 Prediction

  • விக்கெட் கீப்பர் - குசால் மெண்டிஸ்
  • பேட்ஸ்மேன்கள் - பதும் நிஷங்கா, சரித் அசலங்கா, பிராண்டன் கிங் (கேப்டன்), எவின் லூயிஸ்
  • ஆல்ரவுண்டர் - வநிந்து ஹசரங்கா (துணைக் கேப்டன்), துனித் வெல்லாலகே, ரொமாரிடோ ஷெப்பர்ட்
  • பந்துவீச்சாளர்கள் - மதீஷா பதிரானா, ஷமார் ஜோசப், குடகேஷ் மோட்டி

SL vs WI 3rd T20I Dream11 Prediction, Today Match SL vs WI, SL vs WI Dream11 Team, Fantasy Cricket Tips, SL vs WI Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka vs West Indies

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News