SLK vs GUY Final Caribbean Premier League 2024Dream11 Prediction:வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயின்ட் லூசியா கிங்ஸ் அணியும், இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இறுதிப்போட்டியானது கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நடப்பு சீசன் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதாலும், இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் நிறைந்துள்ளதாலும் இதில் எந்த அணி வெற்றிபெற்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

SLK vs GUY Final: Match Details

  • மோதும் அணிகள்- செயின்ட் லூசியா கிங்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ்
  • இடம் - புரோவிடன்ஸ் மைதானம், கயானா
  • நேரம் - அக்டோபர் 7, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

SLK vs GUY Final: Ground Pitch Report

Advertisement

இந்த மைதானத்தில் இதுவரை 38 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 18 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 16 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு பந்துவீச்சுக்கு சாதகமான இந்த அடுகளத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 128 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 95 ரன்களாகவும் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

SLK vs GUY Final: Head-to-Head 

  • Total Matches: 24
  • Saint Lucia Kings: 9
  • Guyana Amazon Warriors: 15
  • No Result: 00

SLK vs GUY Final: Live Streaming Details

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

Saint Lucia Kings vs Guyana Amazon Warriors Possible XIs 

செயின்ட் லூசியா கிங்ஸ்: ஜான்சன் சார்லஸ், ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), அக்கீம் அகஸ்டே, டிம் செய்ஃபர்ட், ரோஸ்டன் சேஸ், ஜோஹன் ஜெர்மியா, டேவிட் வைஸ், அல்ஸாரி ஜோசப், காரி பியர், நூர் அகமத்

Advertisement

கயானா அமேசன் வாரியர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், கெவ்லான் ஆண்டர்சன், ஷாய் ஹோப், ஷிம்ரான் ஹெட்மையர், மொயீன் அலி, ரொமாரியோ ஷெப்பர்ட், கீமோ பால், டுவைன் பிரிட்டோரியஸ், மோதி-கன்ஹாய், ஷமர் ஜோசப், இம்ரான் தாஹிர்

SLK vs GUY: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ஜான்சன் சார்லஸ், டிம் செய்ஃபெர்ட், ரஹ்மனுல்லா குர்பாஸ், ஷாய் ஹோப்
  • பேட்டர்ஸ்: ஃபாஃப் டூ பிளெசிஸ், ஷிம்ரான் ஹெட்மையர்
  • ஆல்-ரவுண்டர்கள்: மொயீன் அலி, டேவிட் வைஸ், ரோஸ்டன் சேஸ்
  • பந்துவீச்சாளர்கள்: இம்ரான் தாஹிர், நூர் அஹ்மத்

SLK vs GUY Final Dream11 Prediction, Today Match SLK vs GUY , SLK vs GUY Dream11 Team, Fantasy Cricket Tips, SLK vs GUY Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the Caribbean Premier League 2024

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News