இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் உத்தரகாண்ட் மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய உத்தரகாண்ட் அணியானது சமர்த் மற்றும் ஆதித்யா டாரே ஆகியோரது அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சமர்த் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்களையும், ஆதித்யா டாரே 2 பவுண்டரி, 5 சிக்ஸர்களையும் விளாசி தலா 54 ரன்களைச் சேர்த்தனர். குஜராத் அணி தரப்பில் விஷல் ஜெய்ஸ்வால் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

அதன்பின் சவாலான இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணிக்கு ஆர்யா தேசாய் மற்றும் உர்வில் படேல் இணை வழக்கம் போல் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் 23 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆர்யா தேசாய் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அபிஷேக் தேசாயும் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபக்கம் பவுண்டரி மழை பொழிந்த ஊர்வில் படேல் 36 பந்துகளில் சதமடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த உர்வில் படேல் 8 பவுண்டரி, 11 சிக்ஸர்கள் என 115 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் அக்ஸர் படேல் 28 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் குஜராத் அணி 13.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் உத்தரகாண்ட் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதில் சதமடித்து அசத்திய உர்வில் படேல் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் 36 பந்துகளில் சதமடித்து அசத்திய உர்வில் படேல் டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதன்படி டி20 கிரிக்கெட் வரலாற்றில் 40 பந்துகளுக்குள் இரு முறை சதமடித்த முதல் வீரர் எனும் பெருமையை உர்வில் படேல் பெற்றுள்ளார். முன்னதாக திரிபுரா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் உர்வில் படேல் 28 பந்துகளில் சதமடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News