ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 

Advertisement

அந்த வரிசையில் 2021ஆம் ஆண்டின் சிறந்த டி29 வீராங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இங்கிலாந்தின் நட் ஸ்கைவர், டாமி பியூமண்ட், அயர்லாந்தின் கேபி லூயிஸ் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

இதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நடப்பாண்டில் விளையாடிய 9 டி20 போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் உள்பட 255 ரன்களைச் சேர்த்துள்ளார். 

அதேபோல் அயர்லாந்து அணியின் ஆல் ரவுண்டர் கேபி லூயிஸ் நடப்பாண்டில் ஒரு சதம், ஒரு அரைசதம் என 325 ரன்களைக் குவித்துள்ளார். 

இங்கிலாந்தின் டாமி பியூமண்ட் நடப்பாண்டில் 303 ரன்களை குவித்ததாலும், நாட் ஸ்கைவர் 153 ரன்கள் மட்டும் 10  விக்கெட்டுகளைக் கைப்பற்றியதாலும் இவ்விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News