இந்தியா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியானது நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய மகளிர் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இலங்கை அணியை பந்துவீச அழைத்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா 116 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, ஹர்லீன் தியோல் 47 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 ரன்களையும், ஹர்மன்ப்ரீத் கவுர் 41 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்ததுடன் அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டனர். இதன் காரணமாக இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் கேப்டன் சமாரி அத்தபத்து 51 ரன்களையும், நிலாக்‌ஷி டி சில்வா 48 ரன்களையும், விஷ்மி குணரத்னே 36 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற  வீரங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் இலங்கை அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், முத்தரப்பு தொடரிலும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியின் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகாள் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதன்மூலம் இந்த இணை புதியா சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் அவர்கள் இருவரும் பெலிண்டா கிளார்க் மற்றும் லிசா கெய்ட்லியின் 25 ஆண்டுகால சாதனையை சமன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டில் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் தொடக்க ஜோடியாக 7 முறை ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்கோர் பார்ட்னர்ஷிப்பைப் அமைத்து அசத்தியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் இணைந்து மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் தொடக்க ஜோடியாக அதிக ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்கோர் பார்ட்னர்ஷிப்களைப் உருவாக்கிய ஜோடி எனும் சாதனையை பாடைத்துள்ளனர்.

முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் பெலிண்டா கிளார்க் மற்றும் லிசா கெய்ட்லி ஆகியோர் 2000 ஆம் ஆண்டில் 7 முறை 50+ பார்ட்னர்ஷிப் அமைத்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்சமயம் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இணை அதனை சமன்செய்து அசத்தியுள்ளனர். இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் லிட்செல் மற்றும் லாரா வோல்வார்ட் ஆகியோர் 2017 ம்ற்றும் 2021ஆம் ஆண்டுகளில் தலா 6 முறை 50+ ஸ்கோரை பதிவுசெய்து மூன்றாம் இடத்தில் உள்ளனர். 

Advertisement

ஒரு வருடத்தில் அதிக முறை 50+ பார்ட்னர்ஷிப்கள் அடித்த தொடக்க ஜோடி

  • 7 – ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் (2025)*
  • 7 – பெலிண்டா கிளார்க் & லிசா கீட்லி (2000)
  • 6 – லிசெல் லீ & லாரா வால்வார்ட் (2017)
  • 6 – லிசெல் லீ & லாரா வால்வார்ட் (2021)
  • 6 – டி பியூமண்ட் & வின்ஃபீல்ட்-ஹில் (2016)

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News