இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. 

Advertisement

இதையடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் கடைசி போட்டியானது நாளை நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தலா ஒருவெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ள நிலையில் இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனித்துவ சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளர். அதன்படி, இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா 35 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக ரன்களைக் குவித்த வீராங்கனை எனும் சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.  தற்போது மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக ரன்களை எடுத்த வீராங்கனை எனும் சாதனையி இலங்கை கேப்டன் சாமரி அதபத்து வைத்துள்ளார்.

அவர் இந்த ஆண்டு 21 போட்டிகளில் விளையாடி 720 ரன்கள் குவித்து இந்த சாதனையை தனது பெயரில் வைத்துள்ளார். தற்போது ஸ்மிருட்தி மந்தனா இந்த பட்டியலில் 22 போட்டிகளில் 696 ரன்களைச் சேர்த்து 5ஆம் இடத்தில் உள்ளார். இவருக்கு முன் யுஏஇ அணியின் இஷான் ஓஜா, வெஸ்ட் இண்டீஸின் ஹீலி மேத்யூஸ், யுஏஇ அணியின் கவிஷா அகோடஜ் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள்

  • சாமரி அத்தபத்து (இலங்கை) - 21 போட்டிகளில் 720 ரன்கள், 2024
  • இஷா ஓஜா (யுஏஇ) - 20 போட்டிகளில் 711 ரன்கள், 2024
  • ஹேலி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்) - 14 போட்டிகளில் 700, 2023
  • கவிஷா அகோடேஜ் (யுஏஇ) - 27 போட்டிகளில் 696 ரன்கள், 2022
  • ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 22 போட்டிகளில் 686 ரன்கள், 2024
  • இஷா ஓஜா (யுஏஇ) - 25 போட்டிகளில் 675 ரன்கள், 2022
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News