Smriti Mandhana ICC ODI Batting Rankings: சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒருநாள் வீராங்கனைகளுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 727 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். முன்னதாக இரண்டாம் இடத்தில் இருந்த அவர் தற்சமயம் ஒரு இடம் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

Advertisement

அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்ட நாட் ஸ்கைவர் பிரண்டும் ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்திற்கு முன்னேறிவுள்ளார். அதேசமயம் தென் முதலிடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அணியின் லாரா வோல்வர்ட் ஒரு இடம் பின் தங்கி இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ளார். இதுதவிர்த்து தென் ஆப்பிரிக்க அணியின் தஸ்மின் பிரிட்ஸ் 5 இடங்கள் முன்னேறி 27ஆம் இடத்தையும், சுனே லூஸ் 7 இடங்கள் முன்னேறி 42ஆவது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மகளிர் ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் முதலிடத்தில் நீடிக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்ட்னர், மேகன் ஷாட் ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களிலும், இந்தியா அணியின் தீப்தி சர்மா 4ஆம் இடத்திலும் தொடர்கின்றனர். மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணியின் கிம் கார்த், அலனா கிங், இங்கிலாந்தின் கேட் கிராஸ், வெஸ்ட் இண்டீஸின் ஹீலி மேத்யூஸ் தலா ஒரு இடங்கள் முன்னேறியுள்ளனர்.

Also Read: LIVE Cricket Score

இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீராங்கனை மரிஸான் கேப் 4 இடங்கள் பின் தங்கி 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அஃபி ஃபிளெட்சர் 4 இடங்கள் முன்னேறி 19ஆம் இடத்தையும், தென் ஆப்பிரிக்காவின் நோகுலுலேகோ மிலாபா 6 இடங்கள் முன்னேறி 23ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பெரிதளவில் எந்த மற்றும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News