ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2024 ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது.

Advertisement

அதன் ஒரு பகுதியாக 2024 ஆண்டில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் மற்றும் வீராங்கனை விருதுகான அறிவிப்பை ஐசிசி இன்று அறிவித்து. இதில் 2024 ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வீரராக ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் அஸ்மத்துல்லா ஒமர்சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்த விருதை வென்ற முதல் ஆஃப்கானிஸ்தான் வீரர் எனும் பெருமையையும் ஒமர்ஸாய் பெற்றுள்ளார். 

Advertisement

முன்னதாக இந்த விருதுகான பரிந்துரைப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், இலங்கை அணியின் குசால் மெண்டிஸ், வநிந்து ஹசரங்கா ஆகியோருடன் ஆஃப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஒமர்ஸாயின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் ஓட்டுகளின் அடிப்படையில் ஐசிசி 2024ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதை அஸ்மதுல்லா ஒமர்ஸாய் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2024 ஆம் ஆண்டில், ஆமர்சாய் 52.12 சராசரியாக 417 ரன்கள் எடுத்து ஆஃப்கானிஸ்தானின் இரண்டாவது அதிக ஒருநாள் ரன் எடுத்த வீரராக இருந்தார். ஆப்கானிஸ்தானுக்காக 14 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது பந்து வீச்சாளராகவும் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே அவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் 2024ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீராங்கனை எனும் விருதை இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளார். முன்னதாக இந்த விருதிற்கான பரிந்துரை பட்டியலில் இலங்கை அணியின் சமாரி அத்தபத்து, தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டும், ஆஸ்திரேலியாவின் அனபெல் சதலேண்ட் மற்றும் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதில் ஸ்மிருதி மந்தனா கடந்தாண்டில் மட்டும் 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 சதங்களுடன் 747 ரன்களை எடுத்ததன் மூலம் இந்த விருதை அவர் வென்றுள்ளார். இதன்மூலம் இரண்டாவது முறையாக ஸ்மிருதி மந்தனா ஐசிசி சிறந்த ஒருநாள் வீராங்கனை விருதை வென்றுள்ளார். முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த ஒருநாள் வீராங்கனை விருதையும் ஸ்மிருதி மந்தனா வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News