EN-W vs IN-W, 3rd ODI: இளம் வீராங்கனைகளை பாராட்டிய ஸ்நே ரானா!

Updated: Tue, Jul 22 2025 11:24 IST
Image Source: Google

EN-W vs IN-W, 3rd ODI: மூத்த வீராங்கனைகள் ரேணுகா சிங், பூஜா வஸ்திரகர் ஆகியோர் இல்லாத நிலையில், இளம் வீராங்கனைகள் ஸ்ரீ சரணி மற்றும் கிராந்தி கவுட் ஆகியோர் சிறப்பாக செயல்படுவதாக  ஸ்னே ராணா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய மகளிர் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடrரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை செஸ்ட்ர் லீ ஸ்டீரிட்டில் நடைபெறவுள்ளது.

இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்த உத்வேகாத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனல் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீராங்கனைகள் சிறப்பாக செயல்படுவதாக ஸ்நே ரானா கூறியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுகுறித்து பேசிய ரானா, “சரணி உண்மையிலேயே ஒரு சிறந்த பந்து வீச்சாளர். அவர் உள்ளூர் மற்றும் மகளிர் பிரீமியர் லீக் தொடர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மேலும் பல வேரியேஷன்கள் இருப்பது அவரின் சிறப்பம்சமாகும். அதைப் பார்ப்பது அருமையாக இருக்கிறது. அவர் பந்து வீச வரும்போதெல்லாம், உடனடியாக விக்கெட் வீழ்த்திவிடுவது போல் இருக்கும். மேலும் அவளுடைய திறமைகளைப் பற்றி அவளுக்கு நல்ல அறிவு இருக்கிறது, எனவே அவளுடன் உரையாடுவது நன்றாக உள்ளது.

கிராந்தி கவுட் குறித்து பேசினால் சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அவருக்குஅனுபவம் குறைவு என்று நான் கூறுவேன். ஆனால் மற்றபடி, அவர்களுக்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் நிறைய அனுபவம் உள்ளது. மேலும் அவர் மகளிர் பிரீமியர் லீக் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதில் அவர்கள் காட்டும் ஆர்வத்தையும், நம்பிக்கையையும் சர்வதேச கிரிக்கெட்டிலும் காட்ட வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய அறிவுரையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: LIVE Cricket Score

நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்ரீ சரணி 11 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அதேசமயம் கிராந்தி கவுட்டும் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் இன்றைய போட்டியிலும் இவர்கள் இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை