நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் என்று தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் பரவலாக கருத்து தெரிவித்து வந்தார்கள். ஆனால் தொடர் ஆரம்பித்த முதல் நாளிலேயே எல்லாம் இந்த கருத்துக்கணிப்புக்கு எதிராக நடக்க ஆரம்பித்தது. முதல் டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Advertisement

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு நாட்கள் ஆட்டத்தை கையில் வைத்திருந்த ஆஸ்திரேலியா அணி மூன்றாவது நாள் துவக்கத்தில் 48 ரண்களுக்கு 9 விக்கெட்டுகளை விட்டு ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி இனி இழப்பதற்கு வாய்ப்பே கிடையாது. 

Advertisement

மேலும் தொடர்ச்சியாக நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் இந்திய அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. அடுத்து நடக்கும் இரண்டு போட்டிகளில் ஒன்றை வென்றாலோ இரண்டையும் சமன் செய்தாலோ, இந்திய அணி தொடர்ச்சியாக நான்கு முறை தொடரை வென்ற சாதனையை இந்தத் தொடரில் படைக்கும்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் தன் தாயாரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் குடும்பத்தாருடன் இருக்க ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். இதனால் அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை அவருக்கு பதிலாக ஸ்மித் கேப்டனாக செயல்பட உள்ளார்.

இதுகுறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஜேஷன் கில்லஸ்பி, “நான் பொறுப்பில் இருந்தால் அவரை இந்தியாவுக்கு திரும்பி வர வேண்டாம் வீட்டிலேயே இருங்கள் என்று சொல்லுவேன். தொடர் போய்விட்டது இனி எங்களால் தொடரை வெல்ல முடியாது. மேலும் இதற்கடுத்து எங்களுக்கு நிறைய தொடர்கள் வர உள்ளன. இப்படியான ஒரு பொன்னான நேரத்தை அவர் தன்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செலவிட இது நல்லதொரு வாய்ப்பாக இருக்கும்.

குடும்பம் மற்றும் நண்பர்கள் மேலும் உடல் நலம் சரியில்லாத தயாருடன் இருப்பதைவிட தொடரை இழந்துவிட்ட நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது முக்கியமா என்று கேட்டால் நிச்சயம் முக்கியம் கிடையாது. இந்த டெஸ்ட் தொடரில் நீங்கள் தேவையில்லை. நீங்கள் ஒரு மகனாக, ஒரு சகோதரனாக உங்கள் குடும்பத்தை சுற்றி இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News