ராகுல் டிராவிட் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று காண ஆவலுடன் இருக்கின்றேன் - சௌரவ் கங்குலி!

Updated: Wed, Feb 08 2023 12:08 IST
Sourav Ganguly backs Rahul Dravid to do well in high-pressure Test series! (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் தொடங்குகிறது. 

இந்நிலையில் இத்தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேட்டியளித்துள்ளார். அப்போது கங்குலியிடம் இந்திய அணி ஏதேனும் ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கங்குலி, “இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கில் சரியாக விளையாட வேண்டும். ஆடுகளம் நன்றாக இருக்கும் என்று நான் எங்கேயோ படித்தேன்.

ஒரு நல்ல விக்கெட் என்றால் பந்து மூன்றாவது நாளில் தான் திரும்பும். அப்போதுதான் பேட்டிங் செய்ய மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை நமது வீரர்கள் அடிப்பதில்லை. அதுக்கு காரணம் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் தான். ஆனால் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இம்முறை இருப்பதால் நான் இந்த தொடரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.

இம்முறை இந்திய அணி நல்ல ஒரு விக்கெட்டில் விளையாடும் என நான் நம்புகிறேன். ஆஸ்திரேலிய வீரர்கள் தொடரை வெல்ல பல யுத்திகளை கையாளுவார்கள். அதில் நாம் விளையாடும்போது வார்த்தைகளை பயன்படுத்தி நமது கவனத்தை சிதைப்பார்கள். புஜாராவுக்கு இந்த தொடர் மிகவும் பெரியதாக அமையும் என்று நான் நம்புகிறேன். அவர் தனது நூறாவது டெஸ்டில் விளையாட இருக்கிறார் .இதனை அவர் பெரிதாக மாற்றுவார் என நான் நம்புகிறேன். இம்முறை இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியும் பலமான அணியாக விளங்குகிறது.

ஆஸ்திரேலியாவிடம் நல்ல பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இரண்டு வீரர்கள் தற்போது காயம் காரணமாக விளையாடவில்லை என்றாலும் அவர்கள் கூடுதலாக பல திறமையான வீரர்களை வைத்திருக்கிறார்கள். இதேபோன்று ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங்கும் சிறப்பாக இருக்கிறது. இந்தியாவில் வெற்றி பெற வேண்டும் என்றால் பேட்டிங்கும் மிகவும் முக்கியம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடும் ஆடுகளத்தை பார்த்தாலே உங்களுக்கும் நிலைமை புரியும்.

நாக்பூர், அகமதாபாத் ஆடுகளங்களில் பந்து நன்றாக சுழற் பந்துவீச்சாளர்களுக்கு பவுன்ஸ் ஆகும். டெல்லியில் ஆடுகளம் கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். தர்மசாலாவில் உள்ள ஆடுகளமும் சிறப்பானதாகவே இருக்கும். இந்த நான்கு மைதானங்களிலும் சுழற் பந்துவீச்சு நன்றாக எடுபடும். என்னை பொறுத்தவரை அஸ்வின், ஜடேஜா இருவரும் இணைந்து விளையாடுவதற்கு வாய்ப்பு குறைவு என நான் நினைக்கிறேன்.

ரிஷப்பந்து வேறு இல்லாததால் ராகுல் டிராவிட் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று காண ஆவலுடன் இருக்கின்றேன். பயிற்சியாளராக ராகுல் டிராவிட் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார். டி20 உலக கோப்பையில் மட்டும் எதிர்பார்த்த அளவு இந்திய அணி செயல்படவில்லை. எனினும் அரையிறுதி வரை ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலில் இந்தியா சென்று இருக்குது. ஒரு வெற்றி பெற்றிருந்தால் கூட நாம் இறுதிப் போட்டிக்கு சென்றிருக்க முடியும்.

ராகுல் டிராவிட்டுக்கு கூடுதல் நேரம் வழங்க வேண்டும். சிறிய காலத்தில் ஒரு பயிற்சியாளர் எதையும் செய்ய முடியாது. நீங்கள் பார்த்தாலே தெரியும், ராகுல் டிராவிட் வந்த பிறகு சுப்மன் கில் எப்படி ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று. இதேபோன்று சூரியகுமார் யாதவும் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலில் சிறந்த வீரராக விளங்கி வருகிறார். எனவே ராகுல் டிராவிட்டுக்கு கொஞ்சம் காலம் கொடுங்கள். அவர் நிச்சயமாக சிறப்பாக செயல்படுவார்” என கங்குலி தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை