WTC Final: தென் ஆப்பிரிக்க, அஸ்திரேலிய அணிகளின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25ஆம் ஆண்டு சுழற்சிக்கான இறுதிப்போட்டி நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இறுதிப்போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து டெம்பா பவுமா தலைமையிலான் தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. இதில் பாட் காம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.
அதேசமயம் ஐசிசி தொடர்களில் இதுநாள் வரை கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் தென் ஆப்பிரிக்க அணி இம்முறை தங்களின் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் களமிறங்கவுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான் இரு அணியின் பிளேயிங் லெவனும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் ரியான் ரிக்கெல்டன், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், காகிசோ ரபாடா, கேசவ் மஹாராஜ், லுங்கி இங்கிடி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இவர்களுடன் டேவிட் பெடிங்ஹாமும் இடம்பிடித்திருக்கும் நிலையில், டோனி டி ஸோர்ஸி, சேனுரன் முத்துசாமி உள்ளிட்டோர் லெவனில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுஷாக்னே தொடக்க வீரராக விளையாடவுள்ளார். மேற்கொண்டு காயத்தில் இருந்து மீண்டுள்ள கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருக்கும் லெவனில் இடம் கிடைத்துள்ள நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம் கொன்ஸ்டாஸ், ஸ்காட் போலண்ட் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் உள்ளிட்டோருக்கு லெவனில் இடம் கிடைக்கவில்லை.
தென் அப்பிரிக்க பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா (கேட்ச்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரேய்ன், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி
Also Read: LIVE Cricket Score
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்.