தென் ஆப்பிரிக்கவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி தற்சமாய்ம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடாரில் முன்னிலைப் பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது. 

Advertisement

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 03) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பந்துவீச அழைத்தார். இப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியின் வியான் முல்டர், கேசவ் மஹாராஜ் மற்றும் அறிமுக வீரர் குவேனா மபாகா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணியில் நசீம் ஷாவிற்கு பதிலாக மிர் ஹம்ஸா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். 

Advertisement

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் ஐடன் மார்க்ரம் 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வியான் முல்டர் 5 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 72 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது.அதன்பின் ரியான் ரிக்கெல்டனுடன் இணைந்துள்ள கேப்டன் டெம்பா பவுமா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் ரிகெல்டன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் டெம்பா பவுமா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 4அவது சதத்தைப் பதிவுசெய்தார். மேற்கொண்டு ரியான் ரிக்கெல்டன் 150 ரன்களைக் கடந்தும் அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 235 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த் நிலையில் கேப்டன் டெம்பா பவுமா 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 106 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 316 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ள ரியான் ரிக்கெல்டன் 21 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 176 ரன்களுடனும், டேவிட் பெட்டிங்ஹாம் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி தரப்பில் சல்மான் ஆகா 2 விக்கெட்டுகளையும், முகமது அப்பாஸ், குர்ரம் ஷஷாத் அகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News