South Africa vs Bangladesh Dream11 Prediction Match 21, T20 World Cup 2024: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் இடம்பிடித்துள்ள அணிகளில் எந்த இரு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறவுள்ள 21ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் வெற்றிகளைப் பதிவுசெய்த கையுடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முன்னிலை வகிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

SA vs BAN: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம்
  • இடம் - நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம், நியூயார்க்
  • நேரம் - ஜூன் 10ஆம் தேதி, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

SA vs BAN Pitch Report

நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் குறித்த விமர்சனங்கள் மேலோங்கியுள்ளன. ஏனெனில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த மைதானத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் நிலையற்ற பவுன்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் இருப்பதால் இது பேட்டர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பிட்சாக இருந்து வருகிறது. மேலும் இங்குள்ள பவுண்டரி எல்லைகளும் நீளமானது என்பதால் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க தடுமாறி வருகின்றனர். இதனால் வேகப்பந்து வீச்சாளர் இந்த மைதானத்தில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். 

SA vs BAN T20I Head to Head

  • மோதிய போட்டிகள் - 08
  • தென் ஆப்பிரிக்கா - 08
  • வங்கதேசம் - 00

SA vs BAN: Where to Watch?

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

South Africa vs Bangladesh Probable Playing XI

தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, ஒட்னியல் பார்ட்மேன்.

Advertisement

வங்கதேசம் உத்தேச லெவன்: தன்ஸித் ஹசன், சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), நஸ்முல் ஹுசைன் சாண்டோ (கேப்டன்), தாவ்ஹித் ஹிரிடோய், ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா ரியாத், ரிஷாத் ஹுசைன், தஸ்கின் அகமது, தன்சீம் ஹசன் ஷகிப், முஸ்தாஃபிசூர் ரஹ்மான்

SA vs BAN T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக்
  • பேட்ஸ்மேன்கள் - மஹ்முதுல்லா ரியாத், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர்
  • ஆல்ரவுண்டர் - மார்கோ ஜான்சன், ரிஷாத் ஹுசைன், ஷாகிப் அல் ஹசன்
  • பந்துவீச்சாளர்கள் - முஸ்தாஃபிசூர் ரஹ்மான் (துணை கேப்டன்), ஆன்ரிச் நோர்ட்ஜே (கேப்டன்), டாஸ்கின் அகமது, ஒட்னீல் பார்ட்மேன்.

SA vs BAN Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match SA vs BAN, SA vs BAN Dream11 Team, Fantasy Cricket Tips, SA vs BAN Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between South Africa vs Bangladesh

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News