ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஒன்றில் இடம்பிடித்திருந்த நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

Advertisement

அதேசமயம் குரூப் 2 இல் இடம்பிடித்துள்ள அணிகளில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. அதற்கேற்றது போல் நாளை நடைபெறும் போட்டிகளின் முடிவைக் கொண்டு எந்த இரண்டு அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பது தெரிந்துவிடும்.

அதன்படி அடிலெய்டில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கும் நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, நெதர்லாந்து அணியை எதிகொள்கிறது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றால் நேரடியாக அரையிறுதிச்சுற்றுக்குள் நுழையும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நடப்பு ஆண்டு டி20 கிரிக்கெட்டில் பல அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகிறது. அதிலும் குயின்டன் டி காக், டேவிட் மில்லர், ரைலீ ரூஸோவ் ஆகியோர் தொடர்ந்து பேட்டிங்கில் பங்களித்து வருவது அந்த அணிக்கும் மிகப்பெரும் பலமாக பார்க்கப்பட்டு வருகிறது.

அதேசமயம் பந்துவீச்சில் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, காகிசோ ரபா, லுங்கி இங்கிடி, வெய்ன் பார்னெல், கேசவ் மஹாராஜ் ஆகியோர் இருப்பதால் இப்போட்டியில் நிச்சயம் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மறுப்பக்கம் நெதர்லாந்து அணி நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் ஆறுதல் வெற்றியைத் தேடும் முடிவில் நாளை களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்த அணியின் பேட்டிங் வரிசையில் மேக்ஸ் ஓடவுட், மைபர்க், பாஸ் டி லீட், டாம் கூப்பர் ஆகியோரும் பந்துவீச்சில் கிளாசென், பால் வன் மீகெரன், பிராண்டன் குளொவர் ஆகியோரும் இருப்பது நிச்சயம் தென் ஆப்பிரிக்க அணிக்கு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs நெதர்லாந்து
  • இடம் - அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்
  • நேரம் - அதிகாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

நேருக்கு நேர் 

  • மோதிய போட்டிகள் - 01
  • தென் ஆப்பிரிக்கா - 01
  • நெதர்லாந்து - 00

உத்தேச லெவன்

தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், டெம்பா பவுமா(கே), ரைலீ ரூஸோவ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே.

நெதர்லாந்து: ஸ்டீபன் மைபர்க், மேக்ஸ் ஓடவுட், டாம் கூப்பர், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கே), ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், பிரெட் கிளாசென், பால் வான் மீகெரென், பிராண்டன் குளோவர்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: குயின்டன் டி காக்
  • பேட்டிங்: ரிலீ ரோசோவ், ஹென்ரிச் கிளாசென், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன்
  • ஆல்-ரவுண்டர்: ஐடன் மார்க்ரம், பாஸ் டி லீடே
  • பந்துவீச்சு: பிராண்டன் குளோவர், பால் வான் மீகெரென், லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News