தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விலையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஜொஹனன்ஸ்பர்கில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் டீன் எல்கர் - ஐடன் மார்க்ரம் இணை சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 

Advertisement

இதில் டீன் எல்கர் 42 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஐடன் மார்க்ரம் அரைசதம் கடந்தார். அதன்பின் களமிறங்கிய ஸோர்ஸியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் இருவரும் சதமடிபார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸோர்ஸி 85 ரன்களிலும், ஐடம் மார்க்ரம் 96 ரன்களிலும் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதையடுத்து களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமா 28, ரியான் ரிக்கெல்டன் 22, வியான் மில்டர் 12, சிமோன் ஹர்மர் ஒரு ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களைச் சேர்த்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News