SA-W vs SL-W, Match 18, Cricket Tips: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.

Advertisement

இந்நிலையில் நாளை நடைபெறும்18ஆவது லீக் ஆட்டத்தில் லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து, சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் தென் ஆப்பிரிக்க அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. இதனால் இந்த ஆட்டத்திலும் அந்த அணி வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

SA-W vs SL-W: Match Details

மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா மகளிர் vs இலங்கை மகளிர்
இடம் - ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானம், கொழும்பு
நேரம்- அக்டோபர் 17, மதியம் 3.0 மணி (இந்திய நேரப்படி)

SA-W vs SL-W: Live Streaming Details

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை  ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.

SA-W vs SL-W: Head-to-Head in ODIs

  • Total Matches: 25
  • South Africa Women: 16
  • Sri Lanka Women: 06
  • No Result: 03

SA-W vs SL-W: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கொழும்புவில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 182 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 101 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 69 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 232 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 375 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SA-W vs SL-W: Possible XIs

Advertisement

South Africa Women: லாரா வோல்வார்ட் (கேப்டன்), தஸ்மின் பிரிட்ஸ், அன்னேக் போஷ், அன்னேரி டெர்க்சன், மரிசான் கேப், நதின் டி கிளெர்க், சினாலோ ஜஃப்டா, சோளோ டிரையோன், நோன்குலுலேகோ மிலாபா, மசபடா கிளாஸ், துமி செகுகுனே

Sri Lanka Women: சாமரி அத்தபத்து (கேப்டன்), ஹாசினி பெரேரா, ஹர்ஷிதா சமரவிக்ரம, விஷ்மி குணரத்னே, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, அச்சினி குல்சூரியா, சுகந்திகா குமாரி, உதேஷிகா பிரபோதனி, இனோகா ரணவீர.

SA-W vs SL-W: Player to Watch Out For

Probable Best Batter

Advertisement

தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங்கில் தஸ்மின் பிரிட்ஸ் முக்கிய வீரராக இருப்பார். இலங்கையைப் பொறுத்தவரை, சாமரி அதபத்து அணியின் முதுகெழும்பாக பார்க்கபப்டுகிறார்.

Probable Best Bowler

தென்னாப்பிரிக்கா அணிக்காக நோன்குலுலேகோ மிலாபா சிறந்த ஃபார்மில் உள்ளார். இலங்கை அணியில் இனோகா ரணவீரா முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார்.

Advertisement

Today Match Prediction: தென் ஆப்பிரிக்கா மகளிர் இரு துறைகளிலும் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். மறுபக்கம் இலங்கை அணிக்கு சொந்த மைதானம் என்ற சாதகம் உள்ளது. இருப்பினும், தென் ஆப்பிரிக்க அணி வலிமையாக இருப்பதால், இப்போட்டியில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்கப்படுகிறது.

Also Read: LIVE Cricket Score

SA-W vs SL-W Prediction Match 18, ICC Womens World Cup 2025, Today Match SA-W vs SL-W, SA-W vs SL-W Prediction, SA-W vs SL-W Predicted XIs, Injury Update of the match between Sri Lanka Women vs South Africa Women

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News