டெஸ்ட் கிரிக்கெட்டில் மெக்ராத் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் ரபாடா!

Updated: Tue, Aug 13 2024 15:22 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது முடிவு எட்டபடால் டிராவில் முடிவடைந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி கயானாவில் நடைபெறவுள்ளது. 

இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா சில சாதனைகளை படைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி, இத்தொடரில் ரபாடா மேற்கொண்டு 5 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 300ஆவது விக்கெட்டை பதிவுசெய்வதுடன், தென் ஆப்பிரிக்க அணிக்காக இச்சாதனையை படைக்கும் 6ஆவது வீரர் எனும் பெருமையையும் பெறுவார். 

இதுவரை 63 டெஸ்ட் போட்டிகளில் 114 இன்னிங்ஸ்களில் 295 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், மேலும் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலிலும் ஆறாவது இடத்தில் உள்ளார். அதேசமயம் தென் அப்பிரிக்க அணிக்காக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் டேல் ஸ்டெய்ன், ஷான் பொல்லாக், மக்காயா நிடினி, ஆலன் டொனால்ட் மற்றும் மோர்னே மோர்கல் ஆகியோர் உள்ளனர்.

மேலும் இந்தப் போட்டியில் காகிசோ ரபாடா 300 விக்கெட்டுகளை எட்டும் பட்சத்தில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கிளென் மெக்ராத்தின் சாதனையை சமன்செய்வதுடன், 9ஆவது இடத்தையும் அவருடம் பகிர்ந்துகொள்வார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் கிளென் மெக்ராத் 64 டெஸ்ட் போட்டிகளில் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இது தவிர, சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில், இயன் போத்தம் (528 விக்கெட்), ரங்கனா ஹெராத் (525 விக்கெட்) போன்ற முன்னணி வீரர்களை பின்னுக்குத் தள்ளும் வாய்ப்பை காசிசோ ரபாடா பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்க அணிக்காக இதுவரை 229 போட்டிகளில் 276 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள காகிசோ ரபாடா மூன்று வடிவிலும் சேர்த்து மொத்தமாக 523 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை