இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு பலம் வாய்ந்த அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
  • இடம் - ராஜித் காந்தி மைதானம், ஹைதராபாத்
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

போட்டி முன்னோட்டம்

நடப்பு ஐபிஎல் சீசனில் மிகவும் வலிமை வாய்ந்த அணியாக பார்க்கப்படுவது பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பார்க்கப்படுகிறது. மேலும் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக அதிக ரன்களை குவித்த அணியாக ஹைதராபாத் அணி சாதனை படைத்துள்ளது. அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் மயங்க் அகர்வால், டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம், அபிஷேக் சர்மா ஆகியோருடன் ஹென்ரிச் கிளாசென் இருப்பது மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

மறுபக்கம் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் புவனேஷ்வர் குமார், நடராஜன், பாட் கம்மின்ஸ் ஆகியோருடன் ஐடன் மார்க்ரம், அபிஷேக் சர்மா, ஷபாஸ் அஹ்மத், வாஷிங்டன் சுந்தர் போன்ற சுழற்பந்துவீச்சாளர்களும் இருப்பது எதிரணிக்கு நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாளைய போட்டியிலும் அந்த அணி தங்களது வெற்றியைப் பெறுவதற்கு கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் முதலிரண்டு போட்டிகளில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, மூன்றாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியது. அதிலும் குறிப்பாக கடைசி போட்டியில் அணியின் நட்சத்திர வீரர்கள் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா போன்ற வீரர்கள் சோபிக்க தவறியதே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Advertisement

ஆனால் கடந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி இறுதிக்கட்டத்திலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், தனது ஃபார்மையும் நிருப்பித்துள்ளதால இனி வரும் போட்டிகளில் முன் கூட்டியே களமிறங்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் நடப்பு ஐபிஎல் சீசனில் அபாரமாக பந்துவீசிய முஸ்தஃபிசூர் ரஹ்மான் நாடு திரும்பியுள்ளது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இருப்பினும் மதீஷா பதிரனா, தீபக் சஹார், ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் டேரில் மிட்செலும் ஒருசில ஓவர்களை வீசிவருவது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் நாளைய போட்டிக்கான சிஎஸ்கே அணியில் முஸ்தஃபிசூர் ரஹ்மானுக்கு மாற்று வீரராக மஹீஷ் தீக்‌ஷனா அல்லது மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகல் இருப்பதாக பார்க்கப்படுகிறது. 

பிட்ச் ரிப்போர்ட்

Advertisement

நடப்பு ஐபிஎல் சீசனில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டது. அதன்படி அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்சரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 277 ரன்களைக் குவித்து சாதனை படைத்தது. இதனல் இந்த மைதானம் பேட்டர்களுக்கு சொர்க்க புரியாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் இங்கு பந்துவீச்சாளர் பெரும் சவாலை சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் பேட்டர்கள் பெரிய ஸ்கோரை குவிப்பார்கள் எனவும் யூகிக்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 19
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 05
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 14

நேரலை

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

எஸ்ஆர்எச்: ராகுல் திரிபாதி, டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கே), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனத்கட்

Advertisement

சிஎஸ்கே: ருதுராஜ் கெய்க்வாட் (கே), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பதிரனா

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: ஹென்ரிச் கிளாசென் (கேப்டன்)
  • பேட்டர்ஸ்: டிராவிஸ் ஹெட், ஷிவம் துபே, ரச்சின் ரவீந்திரா (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட்
  • ஆல்ரவுண்டர்கள்: ஐடன் மார்க்ரம், டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா
  • பந்துவீச்சாளர்கள்: பேட் கம்மின்ஸ், மதீஷா பதிரனா

SRH vs CSK IPL 2024 Dream11 Prediction, Today Match SRH vs CSK, SRH vs CSK Dream11 Team, Fantasy Cricket Tips, SRH vs CSK Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sunrisers Hyderabad vs Chennai Super Kings

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News