இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடியுள்ள 11 போட்டிகளில் தலா 6 வெற்றி, 5 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்யும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் - ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

பிட்ச் ரிப்போர்ட்

நடப்பு ஐபிஎல் சீசனில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டது. அதன்படி அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்சரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 277 ரன்களைக் குவித்து சாதனை படைத்தது. இந்த மைதானம் பேட்டர்களுக்கு சொர்க்க புரியாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் இங்கு பந்துவீச்சாளர் பெரும் சவாலை சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 0
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 03

நேரலை

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கே), ஜெய்தேவ் உனாத்கட், புவனேஷ்வர் குமார், டி நடராஜன்.

Advertisement

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேஎல் ராகுல் (கே), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆஷ்டன் டர்னர், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, குர்னால் பாண்டியா, ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: கேஎல் ராகுல், நிக்கோலஸ் பூரன், ஹென்ரிச் கிளாசென்
  • பேட்டர்ஸ்: டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா
  • ஆல்ரவுண்டர்: மார்கஸ் ஸ்டோனிஸ் (கேப்டன்), குர்னால் பாண்டியா, நிதிஷ் ரெட்டி
  • பந்துவீச்சாளர்கள்: புவனேஷ்வர் குமார், டி நடராஜன், நவீன் உல் ஹக்

SRH vs LSG Dream11 Prediction, Today Match Prediction, Today Match SRH vs LSG, SRH vs LSG Dream11 Team, Fantasy Cricket Tips, SRH vs LSG Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sunrisers Hyderabad vs Lucknow Super Giants.

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News