Sunrisers Hyderabad vs Lucknow Super Giants Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது விறுவிறுபாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடரில் அதிரடிக்கு பஞ்சமில்லாத காரணத்தால் ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது.

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெற இருக்கும் 7ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றியை பெற்ற கையுடனும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அதிர்ச்சி தோல்விக்கு பிறகும் இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளன. இதனால் இந்த ஆட்டத்தில் அந்த அணி வெற்றிபெற்று ஆதிக்கத்தை தொடரும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

SRH vs LSG: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம் -  ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்
  • நேரம் - மார்ச் 27, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

SRH vs LSG Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் ஏழாவது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும். இது அதிக ஸ்கோர்கள் கொண்ட மைதானம் என்பதால் பேட்டர்கள் தங்கள் விருப்பம் போல் விளையாட முடியும், மேற்கொண்டு இங்கு நடைபெற்ற முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 287 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 242 ரன்களும் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் நிச்சயம் பந்துவீச்சாளர்களுக்கு இது பெரும் தலைவலியை ஏற்படுத்து மைதானமாக உள்ளது. இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது அதிக ரன்களை அடிக்க உதவும்.

SRH vs LSG: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

SRH vs LSG Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 04
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 03
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 01

SRH vs LSG Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன் (துணை கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், இஷான் கிஷான்
  • பேட்ஸ்மேன்கள் - மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், டிராவிஸ் ஹெட் (கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி
  • பந்து வீச்சாளர்கள் - ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னோய், மணிமாறன் சித்தார்த்
Advertisement

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants Probable Playing XI

Sunrisers Hyderabad Probable Playing XI : டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சிமர்ஜித் சிங், ஹர்ஷல் படேல், முகமது ஷமி.

இம்பாக்ட் பிளேயர் - ஆடம் ஸாம்பா.

Advertisement

Lucknow Super Giants Probable Playing XI: ஐடன் மார்க்ராம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), டேவிட் மில்லர், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி, ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய்.

இம்பாக்ட் பிளேயர் - மணிமாறன் சித்தார்த்.

SRH vs LSG Dream11 Prediction, SRH vs LSG, SRH vs LSG Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, SRH vs LSG Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Sunrisers Hyderabad vs Lucknow Super Giants

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News