Sunrisers Hyderabad vs Rajasthan Royals Dream11 Prediction, IPL 2025:  ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்று முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள இரண்டாவது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர பட்டாளங்கள் உள்ளதால் இதில் எந்த அணி வெற்றியைப் பதிவுசெய்து தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

SRH vs RR: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் -   ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்
  • நேரம் - மார்ச் 23, மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

SRH vs RR Pitch Report

ஐபிஎல் 2025 இன் இரண்டாவது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும். இது அதிக ஸ்கோர்கள் கொண்ட மைதானமாகும். இங்கு சர்வதேச டி20 போட்டியில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 230 ரன்களாக உள்ள நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வங்கதேசத்திற்கூ எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 297 ரன்களைக் குவித்து சாதனை படைத்தது. மேற்கொண்டு கடந்த ஐபிஎல் சீசனில், ராஜீவ் காந்தி மைதானத்தில் 7 போட்டிகள் நடைபெற்றன, அவற்றில் 3 போட்டிகளில் சேஸிங் செய்த அணியும், 3 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

SRH vs RR: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

SRH vs RR Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 20
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 11
  • ராஜஸ்தான் ராயல்ஸ்- 09

SRH vs RR Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன் (துணைக்கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், இஷான் கிஷான்
  • பேட்ஸ்மேன்கள் - டிராவிஸ் ஹெட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்-ரவுண்டர்கள் - வனிந்து ஹசரங்கா, அபிஷேக் சர்மா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி
  • பந்து வீச்சாளர்கள் - முகமது ஷமி, சந்தீப் சர்மா.
Advertisement

Sunrisers Hyderabad vs Rajasthan Royals Probable Playing XI

Sunrisers Hyderabad Probable Playing XI :டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், முகமது ஷமி, ஆடம் ஸாம்பா.

தாக்க வீரர் - ஜெய்தேவ் உனத்கட்.

Advertisement

Rajasthan Royals Probable Playing XI: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா.

தாக்க வீரர் - ஆகாஷ் மத்வால்.

SRH vs RR Dream11 Prediction, SRH vs RR, SRH vs RR Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, SRH vs RR Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Sunrisers Hyderabad vs Rajasthan Royals

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News