SL vs BAN, 1st Test: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ சதத்தைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார். 

Advertisement

இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிக்கூர் ரஹிம் அகியோர் அபாரமான ஆட்டத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 495 ரன்களைக் குவித்தது. இதில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 148 ரன்களையும், முஷ்ஃபிக்கூர் ரஹிம் 163 ரன்களையும், லிட்டன் தாஸ் 90 ரன்களையும் சேர்த்தனர்.இலங்கை அணி தரப்பில் அசித்த ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், தரிந்து ரத்நாயக்க, பிரியானந்த் ரத்நாயக்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிஷங்கா 187 ரன்களையும், தினேஷ் சண்டிமல் 54 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 39 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் 87 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 485 ரன்களில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் நயீன் ஹசன் 5 விக்கெட்டுகளையும், ஹசன் மஹ்முத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன்பின் 10 ரன்கள் முன்னிலையுடன் இராண்டவாது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் அனமூல் ஹக் 4 ரன்களிலும், மொமினுல் ஹக் 14 ரன்னிலும், ஷாத்மான் இஸ்லாம் 76 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அதன்பின் நஜ்முல் ஹொசைன் சாண்டோவுடன் இணைந்த முஷ்ஃபிக்கூர் ரஹிம் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் காரணமாக வங்கதேச அணி 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய கடைசி நாள் ஆட்டத்தை நஹ்முல் ஹொசைன் சாண்டோ 56 ரன்களுடனும், முஷ்ஃபிக்கூர் ரஹிம் 22 ரன்களுடனும் தொடர்ந்தனர்.

இதில் அரைசதத்தை நெருங்கிய முஷ்ஃபிகூர் ரஹிம் 49 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ சர்வதேச கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன் காரணமாக வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 9 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 125 ரன்களைச் சேர்த்தார்.

Also Read: LIVE Cricket Score

Advertisement

இதனால் இலங்கை அணிக்கு 295 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடி இலங்கை அணியில் லஹிரு உதாரா 9 ரன்னிலும், பதும் நிஷங்கா 24 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 6 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 8 ரன்னிலும் விக்கெட்ட இழந்தனர். இதனால் இலங்கை அணி 4  விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களைச் சேர்த்த நிலையில் 5ஆம் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ தேர்வு செய்யப்பட்டார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News