இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்ட் டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை தொடங்கவுள்ளது.

Advertisement

அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான 16 பேர் அடங்கிய இலங்கை அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. 

Advertisement

அதன்படி, குசால் மெண்டிஸ் தலைமையிலான இந்த அணியில் லஹிரு குமாரா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் காயம் காரணமாக துஷ்மந்தா சமீரா, ஷெவோன் டேனியல், தனஞ்செயா டி சில்வா ஆகியோர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர். அதேசமயம் டி20 தொடரிலிருந்து விலகியிருந்த பதும் நிஷங்கா இந்த ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் நட்சத்திர வீரர்கள் வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்சனா, அகிலா தனஞ்செயா, தில்ஷன் மதுஷங்கா, சரித் அசலங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இலங்கை அணி: குசல் மெண்டிஸ் (கே), சரித் அசலங்கா, பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், சஹான் ஆராச்சிகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லலாகே, அகில தனஞ்செய, சாமிக்க கருணாரத்ன, தில்ஷன் மதுஷங்கா, பிரமோத் மதுஷான், லஹிரு குமாரா.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News