இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவிலுள்ள ஆர் பிரமதோசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ - குசால் மெண்டீஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் மெண்டிஸுடன் இணைந்த சமரவிக்ரமா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மெண்டிஸ் 46 ரன்களுக்கும், சமரவிக்ரமா 41 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜனித் லியாங்கேவும் 21 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய சரித் அசலங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் களமிறங்கிய சஹான், தசுன் ஷனகா, மஹீஷ் தீக்‌ஷனா என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்கா தனது 4ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

பின் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 101 ரன்கள் எடுத்த நிலையில் சரித் அசலங்கா விக்கெட்டை இழக்க, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்களைச் சேர்த்துள்ளது. ஜிம்பாப்வே அணி தரப்பில் ரிச்சர்ட் நகவரா, பிளசிங் முசரபானி, ஃபராஸ் அக்ரம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News