இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு பிரதிகா ராவல் - ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 18 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

பின்னர் களமிறங்கிய ஹர்லீன் தியோலும் 29 ரன்களுடன் விக்கெட்டை இழந்தர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 30 ரன்களுக்கும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 37 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தர். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷ் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். பின் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 58 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரிச்சா கோஷும் விக்கெட்டை இழந்தார்.

இறுதியில் தீப்தி சர்மா 24 ரன்னிலும், காஷ்வி கௌதாம் 17 ரன்களையும், ஸ்நே ரானா 10 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்களைக் குவித்தது. இலங்கை மகளிர் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுகந்திகா குமாரி மற்றும் கேப்டன் சமாரி அத்தபத்து ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஹாசினி பெரேரா மற்றும் விஷ்மி குணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் ஹாசினி பெரேரா 22 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய் ஹர்ஷிதா சமரவிக்ரமா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குணரத்னே 33 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்து அசத்திய சமரவிக்ரமாவும் 53 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய அணியின் கேப்டன் சமாரி அத்தபத்துவும் 23 ரன்களைச் சேர்த்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

இதையடுத்து இணைந்த கவிஷா தில்ஹாரி - நிலாக்‌ஷி டி சில்வா இணை பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் முயற்சியில் இறங்கினர். இதில் நிலாகஷி டி சில்வா தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்து அசத்தினார். அதன்பின் 35 ரன்களில் கவிஷா தில்ஹாவியும், ஒரு ரன்னில் விஹாங்காவும், 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 56 ரன்களைச் சேர்த்த நிலைஉஇல் நிலாக்‌ஷி டி சில்வாவும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த அனுஷ்கா சஞ்சீவனி - சுகந்திகா குமாரி இணை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். 

Advertisement

Also Read: LIVE Cricket Score

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அனுஷ்கா சஞ்சீவனி 23 ரன்களையும், சுகந்திகா குமாரி 19 ரன்களையும் சேர்க்க, இலங்கை மகளிர் அணி 49.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை மகளிர் அணி இத்தொடரில் தங்களுடைய இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய அதேவேளையில், இந்திய மகளிர் அணி இத்தொடரில் தங்களுடைய முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News