SL vs NZ: மூன்றாவது போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து முக்கிய வீரர்கள் விடுவிப்பு!

Updated: Mon, Nov 18 2024 19:37 IST
Image Source: Google

நியூசிலாந்து அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இலங்கை அணியானது இரண்டிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.   

இந்நிலையில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (நவ.19 )பல்லகலே சர்வதெச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இலங்கை அணி ஒருநாள் தொடரை வென்றுள்ளதன் காரணமாக, இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற முயற்சி செய்யும்.

அதேசமயம் நியூசிலாந்து அணி முந்தைய தோல்விக்கான பதிலடி கொடுப்பதுடன், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதல் தேடமுயற்சிக்கும். இதனால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பாப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனையடுத்து இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் பல்லகலேவில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இப்போட்டிக்கான இரு அணியிலும் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இப்போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து குசால் மெண்டிஸ், பதும் நிஷங்கா, கமிந்து மெண்டிஸ் மற்றும் அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் ஒருநாள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நுவனிந்து ஃபெர்னாண்டோ, லஹிரு உதாரா. ஈஷன் மலிங்கா ஆகியோர் இப்போட்டிக்கான இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

Also Read: Funding To Save Test Cricket

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது நடைபெற்று வரும் தொடரின் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் குசல் மெண்டிஸ், பாத்தும் நிசாங்க, கமிந்து மெண்டிஸ் மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோரை விடுவிக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தயாராவதற்கு மேற்கண்ட வீரர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்க தேர்வாளர்கள் இந்த முடிவு எடுத்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை