இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன. இதில் நடைபெற்ற டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று நடைபெற்று வருகிறது.
அதன்பின் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது வரும் ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் கொழும்புவில் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். மேற்கொண்டு ஷிவம் தூபே, ரியான் பராக், ஹர்ஷித் ரானா உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை ஒருநாள் அணியின் புதிய கேப்டனாகவும் சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு பதும் நிஷங்கா, குசால் மெண்டிஸ், வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, மதீஷா பதிரானா, அகிலா தனஞ்செயா, துனித் வெல்லலாகே உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை ஒருநாள் அணி: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீரா சமர்விக்ரமா, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியானகே, நிஷான் மதுஷ்க, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லலாகே, சாமிகா கருணாரத்ன, மஹீஷ் திக்ஷனா, அகிலா தனஞ்செயா, தில்ஷன் மதுஷங்கா, மதீஷா பதிரானா, அசிதா ஃபெர்னாண்டோ.
இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்ஸர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
இந்தியா - இலங்கை ஒருநாள் தொடர் அட்டவணை
- முதல் ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 02 - கொழும்பு
- இரண்டாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 04 - கொழும்பு
- மூன்றாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 07 - கொழும்பு