அக்டோபர் 13-ல் தொடங்கும் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் தொடர்!

Updated: Fri, Sep 27 2024 20:01 IST
Image Source: Google

இலங்கை அணி தற்சமயம் நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கிய இத்தொடரானது, வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைவுள்ளது. 

இதனைத்தொடர்ந்து இலங்கை அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் மைதானங்கள் குறித்த அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் அக்டோபர் 13ஆம் தேதி முதல் டி20 தொடரும், அக்டோபர் 20ஆம் தேதி முதல் ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளது.

மேலும் இதில் டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் தம்புளாவிலும், ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளும் கண்டியிலும் நடைபெறவுள்ளது. முன்னதாக இலங்கை அணி சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்தாலும், ஒருநாள் தொடரை கைப்பற்றிய உத்வேகத்துடன் இத்தொடரை எதிர்கொள்கிறது. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியும் தென் ஆப்பிரிக்க தொடரை வென்ற கையோடு இத்தொடரை எதிர்கொள்வதால் ரசிகர்களின் எதிபார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் தொடர் அட்டவணை

டி20 தொடர்

  • முதல் டி20, தம்புல்லா, அக்டோபர் 13
  • 2ஆவது டி20, தம்புல்லா, அக்டோபர் 15
  • 3ஆவது டி20, தம்புல்லா, அக்டோபர் 17

Also Read: Funding To Save Test Cricket

ஒருநாள் தொடர்

  • முதல் ஒருநாள் போட்டி, கண்டி, அக்டோபர் 20
  • 2ஆவது ஒருநாள் போட்டி, கண்டி, அக்டோபர் 23
  • 3ஆவது ஒருநாள் போட்டி, கண்டி, அக்டோபர் 26
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை