Advertisement

Sri Lanka vs Bangladesh Dream11 Prediction Match 15, ICC T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றனர். இத்தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி விளையாடிய முதல் போட்டியிலேயே இறுதிவரை போராடி தோல்வியைத் தழுவியுள்ளது. மறுபக்கம் வங்கதேச அணியானது நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்கள் முதல் லீக் ஆட்டத்தில் விளையாடவுள்ளது. மேற்கொண்டு கடந்த காலங்களில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டிகளில் வீரர்களுக்கு இடையே பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

SL vs BAN: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs வங்கதேசம்
  • இடம் - கிராண்ட் ப்ரேரி மைதானம், டல்லாஸ்
  • நேரம் - ஜூன் 08ஆம் தேதி காலை 6 மணி (இந்திய நேரப்படி)

SL vs BAN Pitch Report

கிராண்ட் ப்ரேரி மைதானமானது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக அறியப்படுகிறது. இதன் காரணமாக இங்கு இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்கு சிறப்பானதாக இருக்கும். இதன் காரணமாக டாஸ் வெல்லும் கேப்டன் சேஸிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

SL vs BAN T20I Head to Head

  • மோதிய போட்டிகள் - 16
  • இலங்கை - 11
  • வங்கதேசம் - 05
  • முடிவில்லை - 00
Advertisement

SL vs BAN: Where to Watch?

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம்.

Sri Lanka vs Bangladesh Probable Playing XI

Advertisement

இலங்கை உத்தேச லெவன்: பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க (கேப்டன்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, மகேஷ் தீக்ஷனா, மதிஷா பதிரானா, நுவான் துஷாரா.

வங்கதேச உத்தேச லெவன்: தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹுசைன் சாண்டோ (கேப்டன்), ஷாகிப் அல் ஹசன், தாவ்ஹீத் ஹிர்டாய், சௌமியா சர்க்கார், மஹ்முதுல்லா ரியாத், மெஹதி ஹசன், முஸ்தாஃபிசூர் ரஹ்மான், தன்சீம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது.

SL vs BAN T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - லிட்டன் தாஸ்
  • பேட்ஸ்மேன்கள் - மஹ்முதுல்லா ரியாத், நஸ்முல் ஹுசைன் சாண்டோ, சரித் அசலங்கா
  • ஆல்-ரவுண்டர் - ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), வனிந்து ஹசரங்கா(துணை கேப்டன்), ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா
  • பந்துவீச்சாளர்கள் – மதிஷா பத்திரானா, முஸ்தஃபிசூர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மத்
Advertisement

SL vs BAN Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match SL vs BAN, SL vs BAN Dream11 Team, Fantasy Cricket Tips, SL vs BAN Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka vs Bangladesh

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News