நியூசிலாந்து அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இலங்கை அணியானது இரண்டிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.   

Advertisement

இந்நிலையில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (நவ.19 )பல்லகலே சர்வதெச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இலங்கை அணி ஒருநாள் தொடரை வென்றுள்ளதன் காரணமாக, இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றவும், இப்போட்டியில் நியூசிலாந்து ஆறுதல் வெற்றியை தேட முயற்சிக்கும் என்பதாலும் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. 

Advertisement

அதன்படி தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு டிம் ராபிசன் - வில் யங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் யங் ஒருபக்கம் ரன்களைச் சேர்த்த நிலையில், மறுபக்கம் 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் டிம் ராபின்சன் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அவரைத்தொடர்ந்து வில் யங்குடன் ஜோடி சேர்ந்த ஹென்ரி நிக்கோலஸும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் யங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

இதில் வில் யங் 56 ரன்களுடனும், ஹென்றி நிக்கோலஸ் 46 ரன்களுடனும் களத்தில் இருந்த சமயத்தில் இப்போட்டியானது மழை காரணமாக தாமதமானது. இதில் நியூசிலாந்து அணி 21 ஓவர்களில் 112 ரன்களைச் சேர்த்திருந்தது. அதன்பின்னர் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியானது மேலும் காலதாமதமானது. அதன்பின்னர் தொடர் மழை காரணமாக இப்போட்டியானது முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனால் இப்போட்டியானது இரு அணிகளுக்கு வேற்றி தோல்வி இன்றி முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இத்தொடரின் முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்ததன் காரணமாக 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றி அசத்தியது. மேலும் இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் மெண்டிஸ் தொடர்நாயகன் விருதை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News