ஆசிய கோப்பை 2023: தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!

Updated: Tue, Aug 29 2023 19:33 IST
ஆசிய கோப்பை 2023: தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு! (Image Source: Google)

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்க உள்ள இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்துள்ளது. மேலும் இலங்கை அணியின் உலக கோப்பை கனவுக்கும் பேராபத்து ஏற்பட்டு இருக்கிறது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி தங்களது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இதனை அடுத்து ஆஃப்கானிஸ்தான் அணிகளுடன் இலங்கை விளையாட இருக்கிறது.

இந்த இரண்டு போட்டிகளில் இலங்கை அணி ஒன்றிலாவது வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் ஃபோர் சுற்றுக்கு செல்ல முடியும். இந்த நிலையில் இலங்கை அணியில் ஒட்டுமொத்த வேகப்பந்துவீச்சாளர்களுமே காயம் காரணமாக விலகி இருப்பது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. முதலில் அந்த அணியின் துஷ்மந்தா சமீரா காயம் காரணமாக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து சுழற் பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹசரங்காவும் காலில் காயம் ஏற்பட்டு இருப்பதால் அவரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இலங்கைக்கு மேலும் பேரதிர்ச்சியாக தற்போது ஒரு செய்தி வந்திருக்கிறது. அந்த அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான தில்ஷான் மதுசங்கா தற்போது காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.

பயிற்சி ஆட்டத்தில் அவர் விளையாடிய போது காலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இது எதிர்பார்த்ததை விட தீவிரமாக இருப்பதால் உலகக் கோப்பை தொடரில் மதுசங்கா பங்கேற்பது சந்தேகமாக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரிய வட்டாரம் தெரிவிக்கிறது. இதேபோன்று மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான லகிரு திரிமானேவும் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் ஒட்டுமொத்த வேக பந்து வீச்சாளர்கள் இல்லாமலேயே இலங்கை அணி ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கிறது. தற்போது கசூன் ரஜிதா, பிரமோத் மதுசன், மதிஷா பதிரானா ஆகியோர்களை நம்பியே இலங்கை அணி ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்ற மகேஷ் தீக்சனா, மதீஷா பதிரானா ஆகியோர் இலங்கை அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இலங்கை அணி: தசுன் ஷனகா (கேப்டன்), பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, தனஞ்செயா டி சில்வா, சதீரா சமரவிக்ரமா, மகேஷ் தீக்சனா, துனித் வெல்லாகலே, மதீஷா பதிரானா, கசுன் ரஜிதா, துஷான் ஹேமந்தா, பினுரு பெர்ணாண்டோ, பிரமோத் மதுஷான். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை