WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பு சாதனையை படைத்துள்ளனர். 

Advertisement

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதனத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 212 ரன்களையும், தென் ஆப்பிரிக்க அணி 138 ரன்னிலும் என ஆல் அவுட்டானது. இதையடுத்து 74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் நட்சத்திர வீரர்கள் சோபிக்க தவறினர்.

Advertisement

அந்த அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மிட்செல் ஸ்டார்க் 5 பவுண்டரிகளுடன் 56 ரன்களையும், அலெக்ஸ் கேரியும் 5 பவுண்டரிகளுடன் 43 ரன்களை எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கவில்லை. இதனால் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணியானது விளையாடி வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் இணை சிறப்பு சாதனையை படைத்துள்ளனர். அதன்படி இவர்கள் இருவரும் கடைசி விக்கெட்டிற்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதன்மூலம் ஐசிசி தொடரின் இறுதிப் போட்டிகளின் வரலாற்றில் பத்தாவது விக்கெட்டுக்கு 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் அமைத்த முதல் ஜோடி எனும் சாதனையைப் படைத்துள்ளனர். 

முன்னதாக, 1975ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி மற்றும் ஜெஃப் தாம்சன் பத்தாவது விக்கெட்டுக்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தென் அப்பிரிக்க பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா (கேட்ச்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரேய்ன், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி

Advertisement

Also Read: LIVE Cricket Score

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News