இந்திய தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன், ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி டிசம்பர் 5ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது டிசம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய மகளிர் அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரக மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடியேயான டி20 தொடரானது டிசம்பர் 15ஆம் தேதியும், ஒருநாள் தொடர் டிசம்பர் 22ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதில் டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் நவி மும்பையிலும், ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளும் பரோடாவிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஹீலி மேத்யூஸ் தலைமையிலான இந்த அணிக்கு ஷெமைன் காம்பெல் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் அந்த அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஸ்டெஃபானி டெய்லர் காயம் காரணமாக இத்தொடருக்கான அணியில் இடம்பிடிக்காத நிலையில், அந்த அணியின் முன்னாள் கேப்டன் டியாண்டிரா டோட்டின் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி: ஹீலி மேத்யூஸ் (மே), ஷெமைன் காம்பெல்லே, ஆலியா அலீன், ஷாமிலியா கான்னெல், நெரிசா கிராப்டன், டியான்ட்ரா டோட்டின், அஃபி ஃபிளெட்சர், ஷபிகா கஜ்னாபி, சினெல்லே ஹென்றி, ஜைடா ஜேம்ஸ், கியானா ஜோசப், மாண்டி மங்ரு, அஷ்மினி முனிசார், கரிஷ்மா ராம்ஹராக், ரஷாதா வில்லியம்ஸ்
Also Read: Funding To Save Test Cricket
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர்
- 15-டிசம்பர் - 7:00 PM - முதல் டி20 - நவி மும்பை
- 17-டிசம்பர் - 7:00 PM - 2வது டி20 - நவி மும்பை
- 19-டிசம்பர் - 7:00 PM - 3வது டி20 - நவி மும்பை
- 22-டிசம்பர்- 1:30 PM - முதல் ஒருநாள் - பரோடா
- 24-டிசம்பர் - 1:30 PM - 2ஆவது ஒருநாள் - பரோடா
- 27-டிசம்பர் - 9:30 AM - 3ஆவது ஒருநாள் - பரோடா