இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (பிப்.06) கலே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 11 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதன்பின் கருணரத்னேவுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்த்தொடங்கியது. இதில் இருவரும் இணைந்து தங்களது 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் கடந்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட திமுத் கருணரத்னே 36 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, தினேஷ் சண்டிமால் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் ஒரு ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 13 ரன்னிலும், கேப்டன் தனஞ்செயா டி சில்வா ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.

Advertisement

அவர்களைத் தொடர்ந்து மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தினேஷ் சண்டிமால் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 74 ரன்களிலும் அடுத்து வந்த ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா மற்றும் நிஷான் பெய்ரிஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை குசால் மெண்டிஸ் 59 ரன்களுடனும், லஹிரு குமாரா ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். இதில் குசால் மெண்டிஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குசால் மெண்டிஸ் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 85 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், மேத்யூ குஹ்னெமன் ஆகியோர் தலா 3 விக்கெடுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் - உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 21 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னேவும் 4 ரன்களுடன் விக்கெட்டை இழந்தனர். பின்னர் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் உஸ்மான் கவாஜா 34 ரன்களுடனும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் நிஷான் பெய்ரிஸ், பிரபாத் ஜெயசூர்யா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News