இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 257 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 85 ரன்களையும், தினேஷ் சண்டிமால் 74 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், லையன், குஹ்னெமன் ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் சதமடித்து அசத்தினர், இதில் ஸ்மித் 131 ரன்களையும், அலெக்ஸ் கேரி 156 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 414 ரன்களைக் குவித்தது. இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 157 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

Advertisement

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் குசால் மெண்டிஸ் அரைசதம் கடந்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறிய காரணத்தால் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 76 ரன்களையும், குசால் மெண்டிஸ் 50 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் லையன், குஹ்னெமன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 75 ரன்கள் என்ற எளிய இலக்கை இலங்கை அணி நிர்ணயித்திருந்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 17.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை அலெக்ஸ் கேரியும், தொடர் நாயகன் விருதை ஸ்டீவ் ஸ்மித்தும் கைப்பற்றினர். 

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதில் ஒன்றாக இப்போட்டியின் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து ஸ்டீவ் ஸ்மித் 5 கேட்சுகளை பிடித்தார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 200ஆவது கேட்சை பூர்த்தி செய்தார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மைல் கல்லை எட்டிய முதல் வீரர் எனும் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்சுகள்

  • ராகுல் டிராவிட்(இந்தியா) - 210 கேட்சுகள் (301 இன்னிங்ஸ்)
  • ஜோ ரூட்(இங்கிலாந்து) - 207 கேட்சுகள் (289 இன்னிங்ஸ்)
  • மஹேல ஜெயவர்தனே(இலங்கை) - 205 கேட்சுகள் (270 இன்னிங்ஸ்)
  • ஸ்டீவ் ஸ்மித்(ஆஸ்திரேலியா) - 200 கேட்சுகள் (221 இன்னிங்ஸ்)
  • ஜாக் காலிஸ்(தென் ஆப்பிரிக்கா) - 200 கேட்சுகள் (315 இன்னிங்ஸ்)

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News