ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மே 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Advertisement

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 13 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.  முன்னதாக கடந்தாண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது கயத்தை சந்தித்த பென் ஸ்டோக்ஸ் அதன்பின் 5 மாதங்களாக எந்தவொரு போட்டிகளிலும் பங்கேற்காமல் விலகி வந்தார். மேற்கொண்டு எந்தவொரு போட்டிகளிலும் விளையாடமால் அவர், தற்போது காயத்தில் இருந்து மீண்டு இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

Advertisement

மேற்கொண்டு இந்த இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுக வீரர்கள் சாம் குக் மற்றும் ஜோர்டன் காக்ஸ் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து அணியின் நட்சத்திர வீரர்கள் ஜோ ரூட், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், கஸ் அட்கின்சன், ஒல்லி போப் ஆகியோருடன் ஸாக் கிரௌலி, சோயப் பசீர், ஜேமி ஸ்மித் உள்ளிட்டோரும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். அதேசமயம் இத்தொடருக்கான ஜிம்பாப்வே அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். பயிற்சியும் விளையாடுறதும் முற்றிலும் வேற. பயிற்சியில என்ன செஞ்சாலும், ஒரு ஆட்டத்துல உங்க உடல் வெளிப்படுற தீவிரத்தை உங்களால பிரதிபலிக்க முடியாது. மீண்டும் களத்தில் இறங்குறதுக்கு நான் எவ்வளவு உற்சாகமா இருக்கிறேன் என்று கூறவேண்டும் எனில், அது என்னோட பயிற்சியில இருந்து வித்தியாசமா இருக்கும் என்று எனக்குத் தெரியும்.

ஆனால் ஒரு வீரராக எனது பங்கைப் பொறுத்தவரை, பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு, நான் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறேன். என் கையில் பேட் அல்லது பந்து இருந்தாலும் சரி, நான் மீண்டும் களத்தில், மிகப்பெரிய மேடையில் செய்ய விரும்புகிறேன். நான் அதை முன்பே செய்திருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும், இப்போதும் என் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ள ஒன்று, என்னால் மீண்டும் அதனை செய்ய முடியும்.

நான் எப்போதும் கடினமாக உழைக்கிறேன். காயம் ஏற்படும் போது எனது கொள்கை என்னவென்றால், காயம் அடைவதற்கு முன்பு இருந்ததை விட மீண்டும் உடல் தகுதியுடன் திரும்புவேன். கிரிக்கெட் முதல் உடற்பயிற்சி வரை அனைத்து அம்சங்களிலும் நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன், மேலும் நான் மீண்டும் களத்தில் இறங்கும்போது, ​​நான் இதுவரை இருந்ததை விட சிறந்த உடல் தகுதியுடன் இருக்கக்கூடிய நிலையில் இருப்பேன் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், சாம் குக், ஜேம்ஸ் ரீவ், ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஓலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங்.

Also Read: LIVE Cricket Score

ஜிம்பாப்வே டெஸ்ட் அணி: கிரேக் எர்வின், பிரையன் பென்னட், பென் கரண், ட்ரெவர் குவாண்டு, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரே, வெலிங்டன் மசகட்சா, பிளெஸிங் முசரபானி, ரிச்சர்ட் ங்கராவா, நியூமன் நியாம்ஹுரி, விக்டர் நியுச்சி, சிக்கந்தர் ராசா, தஃபத்ஸ்வா சிகா, நிக்கோலஸ் வெல்ச், சீன் வில்லியம்ஸ்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News