பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

Advertisement

அதன்படி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

இதையடுத்து இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடினார். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரரும், நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் செயல்பட்டு வரும் சுனில் கவாஸ்கர் மைதானத்தில் இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை கைகளில் ஏந்திய தருணத்தில் சிறு பிள்ளை போல நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். 

இந்நிலையில் சுனில் கவாஸ்கர் நடனமாடும் இந்த காணொளியானது இணையத்திலும் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் சுனில் கவாஸ்கர், கடந்த 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கும் உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்போட்டி குறித்து பேசினால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் டேரில் மிட்செல் 63 ரன்களையும், மைக்கேல் பிரேஸ்வெ ல் 53 ரன்களையும் சேர்க்க, ரச்சின் ரவீந்திரா 37 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 34 ரன்களையும் சேர்த்தததன் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களைச் சேர்த்தது.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 76 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 34 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News