கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த ஐபிஎல் தொடரின் 13வது சீசன், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இத்தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்திய மும்பை அணி 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. 

Advertisement

மேலும் சிஎஸ்கே அணி முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் லீக் ஆட்டத்தில் வெளியேறியது. இதற்கு முக்கிய காரணம், தனிப்பட்ட காரணங்களுக்காக சிஎஸ்கே அணியின் துணைக் கேப்டன் சுரேஷ் ரெய்னா தொடரிலிருந்து விலகியதும் ஒன்று.

Advertisement

இருப்பினும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மீண்டும் சென்னை அணிக்காக களமிறங்கி விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு தற்போது மீண்டும் எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதால் சுரேஷ் ரெய்னா இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஏனெனில் கடந்த ஆண்டு இதே போன்ற சூழ்நிலையில் தான் அவர் தொடரில் இருந்து வெளியேறினார் என்பதனால் இந்த ஆண்டு என்ன நடக்கும் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். அதேசமயம் சமூக வலைதளங்களில் சுரேஷ் ரெய்னா குறித்து மீம்ஸ்களும் வைரலாகின.

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News