இலங்கையில் நடைபெற இருக்கும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகின்ற ஜூன் மாதம் 30 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது . இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கான வீரர்களுக்கான ஏலம் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி நடைபெற உள்ளது .

Advertisement

இந்த தொடரிலும் பிற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக் போட்டிகளைப் போலவே சர்வதேச வீரர்கள் ஏலம் முறையில் கலந்து கொள்கின்றனர் . இந்த வருடம் நடைபெற இருக்கும் ஏலத்தில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குட்டி தல என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா கலந்துகொள்ள இருக்கிறார் . 

Advertisement

இதற்காக அவர் தனது பெயரையும் பதிவு பதிவு செய்துள்ளார் . தன்னுடைய அடிப்படை விலையாக 50,000 அமெரிக்க டாலராக நிர்ணயம் செய்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா . லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் இதற்கு முன்பு இந்தியாவில் இருந்து முன்னாள் ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் 2020 ஆம் ஆண்டு விளையாடிவுள்ளார்.  

கடந்த ஆண்டு அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா சமீபத்தில் நடைபெற்ற லெஜன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கு பெற்றார் . இந்தியா மற்றும் சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய இவர் சிஎஸ்கே அணி நான்கு முறை பட்டங்களை வென்ற போது முக்கிய பங்களிப்பையும் அளித்திருக்கிறார் . சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்களை குவித்திருக்கும் வீரரும் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது . 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News