சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 838 புள்ளிகளுடன் தொடர்ந்து 2ஆவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் உள்ள பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கும் அவருக்கும் 15 புள்ளிகளே வித்தியாசம் இருக்கிறது. ரிஸ்வான் 853 புள்ளிகளுடன் இருக்கிறார்.

Advertisement

32 வயதான சூர்யகுமார் யாதவ் சமீபகாலமாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தென் ஆப்பிரிக்கா தொடரில் அவர்தான் அதிக ரன் குவித்து இருந்தார். மேலும் டாப் 10 வரிசையில் இந்திய வீரர்களில் சூர்ய குமார் யாதவ் மட்டுமே இடம் பெற்றுள்ளார். 

Advertisement

அதேசமயம் கேஎல் ராகுல் 13ஆவது இடத்திலும் (606 புள்ளிகள்), முன்னாள் கேப்டன் விராட் கோலி 14ஆவது இடத்திலும் (605 புள்ளி), கேப்டன் ரோஹித் சர்மா 16ஆவது இடத்திலும் (604 புள்ளி) உள்ளனர்.

பாபர் அசாம் (பாகிஸ்தான்) மார்க்ராம் (தென் ஆப்பிரிக்கா), கான்வாய் (நியூசிலாந்து), ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா), நிஷங்கா (இலங்கை), முகமது வாசிம் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்), குயின்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் 3 முதல் 10ஆவது இடங்களில் உள்ளனர்.

பந்து வீச்சை பொறுத்தவரை டாப் 10 வரிசையில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை. புவனேஸ்வர் குமார் 638 புள்ளிகளுடன் 13ஆவது இடத்தில் உள்ளார். ஹாசில்வுட் (ஆஸ்திரேலியா) 732 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ரஷீத்கான் (ஆப்கானிஸ்தான்), 2ஆவது இடத்திலும், ஹசரங்கா (இலங்கை) 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

ஒரு நாள் போட்டி தர வரிசையில் விராட் கோலிக்கு சரிவு ஏற்பட்டு உள்ளது. 6ஆவது இடத்தில் இருந்து 7ஆவது இடத்துக்கு பின் தங்கி உள்ளார். அவர் 722 புள்ளிகளை பெற்று உள்ளார். கேப்டன் ரோகித் சர்மா 718 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் உள்ளார்.

Advertisement

இந்த இருவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடவில்லை. தவான் 17ஆவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் வீரர்களான பாபர் அசாம், இமாம்-உல் ஹக் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 5 இடங்கள் முன்னேறி உள்ளார். 30ஆவது இடத்தில் இருந்து அவர் 25ஆவது இடத்துக்கு வந்து உள்ளார். பும்ரா தொடர்ந்து 10-வது இடத்தில் நீடிக்கிறார். யசுவேந்திர சாஹல் 20ஆவது இடத்தில் உள்ளார்.

டிரென்ட் போல்ட் (நியூசிலாந்து) ஹாசில்வுட் (ஆஸ்திரேலியா), முஜிப் உர் ரஹ்மான் (ஆப்கானிஸ்தான்) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News