ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்வதற்காக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

Advertisement

அதேமயம் தொடருக்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை டிரெடிங் முறையில் மும்பை அணி வாங்கியது. அத்துடன் மும்பை அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத் ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவியையும் பறித்து ஹர்த்க் பாண்டியாவை அணியின் கேப்டனாக நியமித்துள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

Advertisement

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரின் போது காலில் காயமடைந்த சூர்யகுமார் யாதவ் தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதையடுத்து அவர் காயத்திலிருந்து மீண்டு தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சூர்யகுமார் யாதவிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் முடிவில் அவர் முழு உடற்தகுதியை எட்டவில்லை என தேசிய கிரிக்கெட் அகாடமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மீண்டும் வரும் 21ஆம் தேதி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் கூடப்படுகிறது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் சில போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, தில்ஷன் மதுஷங்கா, ஸ்ரேயாஸ் கோபால், நுவான் துஷாரா, நமன் திர், அன்ஷுல் கம்போஜ், முகமது நபி, ஷிவாலிக் சர்மா.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News