இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நேற்று லக்னோவில் நடந்தது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, 100 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்ட இந்திய அணியில் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Advertisement

சுப்மன் கில் (11), இஷான் கிஷான் (19), ராகுல் திரிபாதி (13) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து வாஷிங்டன் சுந்தர் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடினர். ஒரு கட்டத்தில் ரன் எடுக்க ஓடி வந்த நிலையில், மறுமுனையில் நின்றிருந்த வாஷிங்டன் சுந்தர் வர வேண்டும் என்று மறுத்தார். 

Advertisement

ஆனால், அதையும் மீறி சூர்யகுமார் யாதவ் ஓடி வர அவரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வாஷிங்டன் சுந்தர் கிரீஸை விட்டு வெளியில் வந்து அவுட்டானார். அதன் பிறகு சூர்யகுமார் யாதவ்வுடன் இணைந்த ஹர்திக் பாண்டியா இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக இந்திய அணி 19.5 ஓவரில் 4 விக்கெட் இழந்து 101 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இதுகுறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், “தான் செய்த தவறை ஒப்புக் கொண்டர். வாஷிங்டன் சுந்தர் ரன் அவுட் ஆனதற்கு நான் தான் காரணம். அவர் சொன்னது போன்று நான் நடந்திருக்க வேண்டும். ஆனால், வாஷிங்டன் சுந்தர் சரியாகத்தான் எனக்கு சிக்னல் செய்திருக்கிறார். இதைக் கூட நான் கவனிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News