இங்கிலாந்து தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!

Updated: Mon, Jan 13 2025 20:09 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து டி20 தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜனவரி 22 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில சிறப்பு சாதனைகளை படைக்க வாய்ப்பினைப் பெற்றுள்ளார். 

சர்வதேச டி-20 போட்டிகளில் 150 சிக்ஸர்கள்

இந்தப் போட்டியில் சூர்யகுமார் 5 சிக்ஸர்கள் அடித்தால், சர்வதேச டி20 போட்டிகளில் தனது 150 சிக்ஸர்களை நிறைவு செய்வார். ரோஹித் சர்மாவுக்குப் பிறகு, இந்த எண்ணிக்கையை எட்டும் இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். இதுவரை இந்திய அணிக்காக 78 போட்டிகளில் 74 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 145 சிக்ஸர்களை அடித்துள்ளார், அதே நேரத்தில் ரோஹித் 205 சிக்ஸர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார்.

டி20 போட்டிகளில் 350 சிக்ஸர்கள்

இதுதவிர்த்து டி20 கிரிக்கெட் போட்டிகளில் சூர்யகுமார் இதுவரை 304 போட்டிகளில் 280 இன்னிங்ஸ்களில் 341 சிக்ஸர்களை அடித்துள்ளார். அவர் மேற்கொண்டு 9 சிக்ஸர்களை அடித்தால், டி20 கிரிக்கெட்டில் 350 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த மூன்றாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். இதுவரை ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மட்டுமே இதனைத் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

8000 டி20 ரன்கள்

மேற்கொண்டு இந்த டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் 125 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் 8000 ரன்களை பூர்த்தி செய்யவுள்ளார். இதனை அவர் எட்டும் பட்சத்தில் இந்தியாவிற்காக இந்த மைல் கல்லை எட்டும் 5ஆவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார். இதுவரை 304 போட்டிகளில் 280 இன்னிங்ஸ்களில் விளையாடி 7,875 ரன்களை அவர் எடுத்துள்ளார். இதுவரை விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல் (துணை கேப்டன்), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை