இந்திய அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் அடங்கிய டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளில் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

Advertisement

 இதில் ஏற்கெனவே இலங்கை அணி தொடரை இழந்துள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாடும் என்பதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றனர். 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் மேற்கொண்டு 76 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டவுள்ளார். அதன்படி இப்போட்டியில் அவர் 76 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2,500 ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெறுவார். இதற்கு முன் முன்னாள் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மட்டுமே இச்சாதனையை படைத்துள்ளனர். 

அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரராக ரோஹித் சர்மா 4231 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். அவரைத்தொடர்ந்து விராட் கோலி 4188 ரன்களுடன் இரண்டாம் இடத்தை தொடர்கிறார். அந்த பட்டியளில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் 2,424 ரன்களைக் குவித்து மூன்றாம் இடத்தில் தொடர்கிறார். இதில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் அவர்களது சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News