பயிற்சியைத் தொடங்கிய சூர்யா; வைரலாகும் காணொளி!
Suryakumar Yadav Fitness Update: அறுவை சிகிச்சைக்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமர் யாதவ் மீண்டும் தனது பயிற்சியைத் தொடங்கியுள்ள காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆசிய கிரிக்கெட் சங்கத்தில் சார்பில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாள், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் விளையாடுவது வழக்கம். மேலும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறும் போது இத்தொடரானது ஒருநாள் வடிலும், டி20 உலகக்கோப்பை தொடரின் போது டி20 வடிவிலும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நடப்பு ஆசிய கோப்பை தொடரானது டி20 வடிவில் எதிவரும் செப்டம்பர் மாதம் முதல் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இந்தாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது யுஏஇ-ல் எதிர்வரும் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி, இறுதிப்போட்டியானது செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.
அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தையும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானையும் எதிர்த்து விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியும் கூடிய விரையில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய டி20 அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான சூர்யகுமார் யாதவ் சமீபாத்தில் அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதனால் அவர் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவது எப்போது என்பதும் குறித்து கேள்விகள் அதிகரித்திருந்தன. இந்நிலையில் தற்சமயம் முழு உடற்தகுதியை எட்டியுள்ளதன் காரணமாக, அவர் தனது பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளார்.
Also Read: LIVE Cricket Score
அதன்படி, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) சூர்யகுமார் யாதவ் முதல் முறையாக வலைகளில் பேட்டிங் செய்வதைக் காண முடிந்தது. இதுகுறித்த காணொளியையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் அவர் எதிர்வரும் ஆசியா கோப்பை தொடரில் விளையாடுவதுடன், டி20 உலககோப்பை தொடருக்கும் தயாராகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.