இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் சூழலில் தொடரை கைப்பற்றும் வாய்ப்புள்ள 4வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

Advertisement

ஃபார்ம் அவுட்டில் இருந்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், கடந்த 4ஆவது போட்டியின் போது அட்டகாசமான கம்பேக் கொடுத்தார். 44 பந்துகளை சந்தித்த அவர் 76 ரன்களை குவித்தார். மேலும் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசைப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தினார். இந்நிலையில் தற்போது மற்றொரு உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளது.

Advertisement

ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தான் கடந்த ஓராண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறார். ஆனால் இன்று அந்த இடத்தை சூர்யகுமார் யாதவ் பிடிக்கலாம். பாபர் அசாம் தற்போது வரை 818 புள்ளிகளுடன் இருக்கிறார். அவர் அடுத்ததாக ஆசியக்கோப்பை தொடரில் தான் டி20 கிரிக்கெட் விளையாடவுள்ளார். எனவே வெறும் 2 புள்ளிகள் மட்டுமே பின்தங்கி உள்ள சூர்யகுமார் இன்று பாபரை முந்துவார்.

இதற்காக இன்றைய போட்டியில் அரைசதம் அடிக்க கூட தேவை இல்லை. 30 பந்துகளில் 40 ரன்களை அடித்துக் கொடுத்தாலே போதும், சூர்யகுமார் யாதவ் முதலிடத்திற்கு முன்னேறுவார். ஒருவேளை இன்றைய போட்டியில் அவர் சொதப்பினாலும், நாளை நடைபெறவுள்ள 5வது டி20 போட்டியில் வாய்ப்புள்ளது.

இதுவரை 20 டி20 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 648 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 அரைசதங்கள் மற்றும் ஒரு சதமும் அடங்கும், அவரின் சராசரி 38.12 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 175.61 ஆகும். காயத்திற்கு பிறகு தற்போது நல்ல கம்பேக் கொடுத்துள்ளதால் ஆசியக்கோப்பை தொடரில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News