டி10 லீக்: டீம் அபுதாபியை 10 ரன்னில் வீழ்த்தியது பங்களா டைகர்ஸ்!

Updated: Fri, Nov 26 2021 22:09 IST
T10 League: Bangla Tigers beat Team Abu Dhabi by 10 runs (Image Source: Google)

டி10 லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் டீம் அபுதாபி - பங்களா டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற அபுதாபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய பங்களா டைகர்ஸ் அணி ஹஸ்ரதுல்லா ஸஸாய் , வில் ஜேக்ஸ் ஆகியோரது அதிரடியான பேட்டிங்கால் 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களைச் சேர்த்தது.

இதில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 43 ரன்களையும், ஹஸ்ரதுல்லா ஸஸாய் 41 ரன்களையும் சேர்த்தனர். 

அதன்பின் இலக்கை துரத்திய டீ அபுதாபி அணியில் பால் ஸ்டிர்லிங் 9, காலின் இங்ராம் 8, லியாம் லிவிங்ஸ்டோன் 20 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

இருப்பினும் அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெயில் 22 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இருப்பினும் அந்த அணியால் 10 ஓவர்களில் 120 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. 

இதன்மூலம் பங்களா டைகர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் டீம் அபுதாபியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை