டி10 லீக் : டெல்லி புல்ஸை வீழ்த்தியது டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!

Updated: Mon, Nov 22 2021 21:27 IST
T10 League: Deccan Gladiators beat Delhi Bulls by 9 wickets (Image Source: Google)

அபுதாபியில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் - டெல்லி புல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய டெல்லி புல்ஸ் அணிக்கு ரொஸ்ஸோவ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் சரிவர சோபிக்க தவறினர். 

இதனால் 10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களை மட்டுமே சேர்த்தது. டெக்கான் அணி தரப்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கைத் துரத்திய டெக்கான் அணியில் தொடக்க வீரர்கள் டாம் கொஹ்லர் - டாம் பாண்டன் இருவரும் பவுண்டரிகளாக விளாசி அசத்தினர். இதில் பாண்டன் 44 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்து கொஹ்லர் அரைசதம் கடந்து அசத்தினார். 

Also Read: T20 World Cup 2021

இதன்மூலம் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 7.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி புல்ஸ் அணியை வீழ்த்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை